2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் வருடாந்த வதிவிட நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் வருடாந்த வதிவிட நிகழ்வு, சேருவில ஹவன்திஸ்ஸ வித்தியாலச் சூழலில் கல்விக்கான ஊக்குவிப்பனை மையப்படுத்தி, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய நிதி உதவியுடன், வண.பிதா போல் சற்குணநாயகம் வழிகாட்டலில் புதன்கிழமை (20) முதல் வெள்ளிக்கிழமை (22) வரை மூன்று நாட்கள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவானது இலங்கையின் பல பாகங்களுக்குக் சென்று தனது பணியினை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் உள்ள  செல்வநகர் கிராமத்திலிருந்து 40 முஸ்லிம் சிறார்களையும், தங்க நகர் கிராமத்திலிருந்து 40 தமிழ் சிறார்களையும், சேருவில கிராமத்திலிருந்து 40 சிங்கள சிறார்களையும்  ஒன்று சேர்த்து சேருவில ஹவன்திஸ்ஸ வித்தியாலயச் சூழலில் நடத்தப்பட்டது.

இதற்கான ஒத்துழைப்புக்களை ஈ.சி.ஆர்.டி.எப் - சேருவில மற்றும் செல்வநகர் அல்-ஹாதி வித்தியாலயம், அன்நூர் வித்தியாலயம், அல் -அமான் வித்தியாலயம் தங்க நகர் சண்பகவல்லி வித்தியாலயம், சேருவில ஹவன்திஸ்ஸ வித்தியாலயம் மற்றும் மகாவலி கமநல நவோதயா வித்தியாலய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்  வழங்கியுள்ளனர்.

இதன் இறுதி நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றது. இந்நிகழ்வில் வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா முகாமையாளர் ஆர் .எப் .கமலநாததீபன்,  நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் டி .நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய சிறார்கள் இன, மத, மொழி வேறுபாடு இன்றி தமது ஆக்க பூர்வத்திறனை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X