2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீர் சேகரிப்பு கொள்கலன்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நீர் சேகரிக்கும் கலன்கள் இன்று சனிக்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீள் குடியேற்ற கிராமங்களைச் சேர்ந்த வரட்சியால் பாதிக்கப்பட்ட 848 குடும்பங்களுக்கு நீர் சேகரிக்கும் கலன்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பொருளாதார அமைச்சின் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் இந் நீர் சேகரிக்கும் கலன்கள் புனானை விகாரை, மயிலந்தன்னை சனசமுக நிலையம், ஜயந்தியாய பல்தேவைக் கட்டடம், ரிதிதென்ன விவசாய அமைப்புக்களின் காரியாலயம் என்பவற்றில் வைத்து வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீர் சேகரிக்கும் கலன்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கலன்களை விநியோகிக்கும் நிகழ்வில் பொருளாதார பிரதி அமைச்சர் எம.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்ட பிரதி திட்ட பணிப்பாளர் எம்.குரைக்குமரன், வாழ்வின் எழுச்சி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் ஜே.மனோகிதராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X