2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை காத்தான்குடியில் மேம்படுத்தும் ஒன்றுகூடல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை காத்தான்குடியில் மேம்படுத்தும் ஒன்றுகூடலொன்று காத்தான்குடி கடற்கரையில் சனிக்கிழமை இரவு (23) நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடியிலுள்ள இடைக்கால மத்திய குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி இடைக்கால மத்திய குழு தலைவரும் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் நடைபெற்ற இந் ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர் கால வேலைத்திட்டங்கள் மற்றும் கட்சி அபிவிருத்தி திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன.

இந்த ஒன்று கூடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரஹூப் ஹக்கீம், மற்றும் கட்சியின் தவிசாளரும், ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சருமான பசீர் சேகுதாவூத், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாறூக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர் உட்பட  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள், காத்தான்குடி இடைக்கால மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X