2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கரிமலையூற்று பள்ளிவாயல் உடைப்பு விடயத்தில் பாதுகாப்பு செயலாளரின் நிலைப்பாடு என்ன: முபீன்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கரிமலையூற்று பள்ளிவாயல் உடைப்பு விடயத்தில் பாதுகாப்பு செயலாளரின் நிலைப்பாடு என்ன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முபீன் விடுத்துள்ளஅறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் முஸ்லிம்களின் மத உரிமைகளை கேள்விக்குள்ளாக்கி அவற்றை மறுக்கும் மன நிலையை உருவாக்குவதில் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தொடராக செயற்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம்கள் அன்மைக்காலமாக எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு மதரீதியான பிரச்சினைகளின் பிண்ணனியில் பௌத்த தீவிரவாதிகள் செயற்பட்டு வருவது நாடறிந்த உண்மையாகும். இவர்களுக்கு பக்க பலமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாகவும் அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டது.  இக்குற்றச் சாட்டை பாதுகாப்பு செயலாளர் மறுத்தும் வருகிறார்.

தற்போது கரிமலையூற்று பள்ளிவயில் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிவாயிலை இராணுவமே உடைத்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பான கிழக்கு மாகாண அமர்வில் இவ் இராணுவம் மீதான குற்றச்சாட்டு மீள வலியறுத்தப்பட்டுள்ளது.

இராணுவம் இப்பள்ளிவாயலை உடைத்திருந்தால் இவ் உடைப்பு விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் நிலைப்பாடு என்ன? இவர் இதை அறிந்திருந்தாரா? அல்லது இராணுவம் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றதா? அல்லது பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் இவ் உடைப்பு இடம் பெற்றதா? பௌத்த தீவிரவாதிகள் இராணுவத்துக்குள் ஊடுருவியுள்ளனரா? அல்லது சிறுபான்மை மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படும் நிகழ்ச்சி நிரலில் இதுவும் ஒன்றா? போன்ற கேள்விகள் முஸ்லிம் மக்களின் மனங்களில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.

முஸ்லிம்களின் மனக்கஷ்டங்களை அகற்றி அவர்களின் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ அதிமேதகு ஜனாதிபதி அவர்களே வழி செய்ய வேண்டுமென அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X