2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுகாதாரத்துறையில் பூரணத்துவமடைந்த மாகாணமாக கிழக்கை மாற்ற வேண்டும்: மன்சூர்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சுகாதாரத்துறையில் பூரணத்துவம் அடைந்த மாகாணமாக கிழக்கை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஐ.எம்.எம்.மன்சூர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (23)  நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

வைத்தியசாலைகளில் நிலவும் பௌதீகவளப் பற்றாக்குறையை  உடனடியாக தீர்த்துவைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பின்தங்கிய பிரதேச மக்களுக்கு சுகாதார சேவையை சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்தியத்துறை அதிகாரிகளிடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் கஸ்தூரி குகன், தாய் சேய் நல வைத்திய நிபுணர் எம்.அச்சுதன், நிர்வாக உத்தியோகத்தர் நித்தியா சதீஸ்குமார், கணக்காளர் இந்திராவதி மோகன், உயிரியல் வைத்திய பொறியியலாளர் கே.லோகராஜா  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X