2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொலைபேசி பழுதுபார்க்கும் பயிற்சி நெறி ஆரம்பம்

George   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


இளைஞர் யுவதிகளின் தொழில் திறமையினை மேம்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொலைபேசி பழுது பார்க்கும் பயிற்சி நெறி, இன்று (25)  திங்கட்கிழமை முனைக்காடு உக்டா சமூக வளநிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த பயிற்சிநெறியில் 20 இளைஞர் யுவதிகள் இணைந்து கொண்டுள்ளனர்.

இப்பயிற்சி நெறி வேல்ட்விஷன் நிறுவனத்தின் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் உக்டா அமைப்பினால் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளதுடன், இப்பயிற்சி நெறியானது தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

பயிற்சி நிறைவின் போது இளைஞர் விவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும்,தொலைபேசி பழுது பார்க்கும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி ஆரம்ப நிகழ்வில் வேல்ட்விஷன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் ஜி.ஜே.அனுராஜ்,கல்வித்திட்ட இணைப்பாளர் சு.அமுதராஜ், உக்டா அமைப்பின் தலைவர் இ.குகநாதன், செயலாளர் சி.கங்காதரன், மற்றும் வளவாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X