2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'உதய ஒளி' அமைப்பினருடன் வாழ்வதார உதவிகள் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 450க்கும் மேற்பட்ட வலது குறைந்த  அங்கத்தவர்களைக் கொண்ட உதய ஒளி எனும் அமைப்பின் பிரதிநிதிகளுடன் அவர்களது வாழ்வாதார உதவிகள் தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (25) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா - வில்வரெத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உதய ஒளி அமைப்பின் தலைவர் செல்வக்குமார், தங்கள் சங்கத்தின் தற்போதைய நிலமை தொடர்பாக மேற்படி பிரதிநிதிகளுக்கு விளக்கி கூறினார்.

தம்மால் இயன்ற உதவிகளைப் பெற்றுத்தருவதாக உதய ஒளி அமைப்பிடம் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதன்போது உறுதியளித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X