2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சர்வமத போதனைக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட இளைஞர்களுக்கான சர்வமத போதனைக் கருத்தரங்கு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கரிதாஸ் எகெட் அமைப்பின் புதிய தலைவர் அருட்தந்தை ஜெரோம் டில்மாவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் 40 இளைஞர், யுவதிகள் வரையில் கலந்துகொண்டனர்.

தேசிய சமாதானப் பேரவையின் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரெட்ண,  இந்துமத போதனைக்காக எஸ்.சிவப்பிரகாசம், கிறிஸ்தவ மத போதனைக்காக அருட்தந்தை ஹரல் ஸ்டீபன், இஸ்லாம் மத போதனைக்காக மௌலவி உதுமாலெப்பை முகமது அஸ்பர் மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் சர்வமத அமைப்பின் அம்பாறை மாவட்ட பிரதிநிதியும் கல்முனை சுபத்ரா ராம விகாராதிபதியுமான ரண்முதுகல சங்கரத்ன தேரர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X