2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இருநாள் பயிற்சிநெறி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில்  முன்பள்ளி 'ஆசிரியர்களுக்கு போசாக்கு மற்றும் சுகாதாரமும் சிறுவர் நலனும்' எனும் தொனிப்பொருளிலான இருநாள் பயிற்சிநெறி செவ்வாய்க்கிழமை (26)நடத்தப்பட்டது.

சத்துருக்கொண்டான் பயிற்சி நிலையத்தில் வேர்ள்ட் விஷன் அமைப்பின் சுகாதார பிரிவிற்குப் பொறுப்பான திட்ட இணைப்பாளர் என்.சபேசன் தலைமையில் இப்யிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்பள்ளியில் கற்கும் சிறுவர்களின் சுகாதாரம் மற்;றும் போசாக்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்பயிற்சி நெறியில் 25 முன்பள்ளி ஆசிரியைகள் பங்குபற்றினர்.

இக்கருத்தரங்கின் பயிற்றுவிப்பாளராக வேர்ள்ட் விஷன் அமைப்பின் வலய மட்ட சுகாதார மற்றும் கல்விக்கு பொறுப்பான பீ. லோஜிதராஜா வளவாளராகக் கலந்துகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X