2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களப்பு மீன்பிடியில் நீடித்து நிலைக்கக் கூடிய ஐந்தாண்டு வாழ்வாதாரத் திட்டம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


களப்பு மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான ஐந்தாண்டு வாழ்வாதாரத் திட்டமொன்றைத் ஆரம்பித்திருப்பதாக பாம் கம்பனியின்  (PALM Company- Eastern Province) பணிப்பாளர் சுனில் தொம்பேபொல இன்று செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.

இந்த களப்பு மீன்பிடி ஆய்வு சம்பந்தமான விளக்கமளிப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

ஐந்தாண்டுத் திட்டத்தில் நீடித்து நிலைக்கக் கூடிய மீன் பிடியும் வாழ்வாதாரமும் செயற்திட்டத்தில் பங்குபற்றும் திட்ட முகாமையாளர்கள், மற்றும் சமூக களப்பணியாளர்களுக்கு ஆய்வு பற்றிய விரிவான விளக்கமளிக்கப்பட்டது.

ஐக்கியராச்சியத்தின் மகா அதிஷ்ட இலாப சீட்டு நிதி அனுசரணையுடன் இந்த ஐந்தாண்டுத் திட்டம் அமுல்படுத்தப்படவிருக்கிறது.

அதன்போது கருத்துத் தெரிவித்த சுனில் தொம்பேபொல,

சூழலுக்கும் நீர் நிலைகளுக்கும் பங்கமேற்படுத்தாத வகையில் நீடித்து நிலைக்கக் கூடியதான இந்த களப்பு மீன்பிடி வாழ்வாதாரத் திட்டம் முதன் முதலாக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமுல்படுத்தப்படவுள்ளது.

தமது வாழ்வாதாரத்துக்;காக களப்பு மீன்பிடியை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ சமூகத்தினர் இந்தத் திட்டத்தின் மூலம் நன்மையடைவர் என பாம் கம்பனியின்  (PALM Company- Eastern Province) பணிப்பாளர் சுனில் தொம்பேபொல கூறினார்.

களப்பு மீன்பிடியில் நீடித்து நிலைக்கக் கூடிய வாழ்வாதாரம் பற்றிய ஆய்வொன்றை பிரக்டிகல் அக்ஸன் நிறுவனமும் (Practical Action) பாம் கம்பனியும்  (PALM Company- Eastern Province) இணைந்து மேற்கொண்டு வருகிறது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X