2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த காணிகளில் மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தகாலப்பகுதியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொது மக்களின் காணிகளில் மீண்டும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ இன்று (26) தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட காணிகள் பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அதில் அவர்களை மீள் குடியேற்றுவதற்கான ஆரம்பக்கட்டமாக வீட்டுப் பாவனைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிண்ணயடி கிராம சேவகர் பிரிவில் 68 குடும்பங்களுக்கும் மீறாவோடை கிராம சேவகர் பிரிவில் 49 குடும்பங்களுக்குமாக 117 குடும்பங்களுக்கு வீட்டுப் பாவனை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி;.எஸ்.எம். சாள்ஸ், அமைச்சின் செயலாளர் ஜனக சுகதபால மேலதிக செயலாளர் எம.;எம். நயிமுதீன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், பிரதி அமைச்சரின் இளைப்புச் செயலாளர்களான பொன் ரவீந்திரன், திருமதி பேரின்பமலர் மனோகரதாஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் சந்திரபால, கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X