2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகரசபை பிரிவில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான எம்.எம்.அலி சப்ரி, எச்.எம்.எம்.பாக்கீர் ஆகியோர் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் வீதி, புதிய காத்தான்குடி நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள முத்துவாப்பா வீதி என்பன கொங்கிறீட் வீதியாக நிர்மாணிப்பதற்குரிய வேலைகள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிராமத்துக்கு  ஒரு வேலைத்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்எ.ச்.அஸ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X