2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மஞ்சந்தொடுவாயில் இஞ்சிச் செய்கை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின்  மஞ்சந்தொடுவாய் 19ஆம் வட்டாரத்தில் முதல் தடவையாக இஞ்சி உற்பத்தி செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திவிநெகும திட்டத்தின் கீழ், இங்கு   600 பாத்திகளைக் கொண்டதாக  இஞ்சி செய்கை பண்ணப்பட்டுள்ளதாக   இதன் உற்பத்தியாளர் எம்.ஹனிபா தெரிவித்தார்.

இந்த இஞ்சி செய்கையோடு சேர்த்து கறிமிளகாய் மற்றும் சோளன் செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

08 மாதங்களைக் கொண்ட இந்த இஞ்சி உற்பத்திச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு 02 மாதங்களாகின்றன. இன்னும் 06 மாதங்களில் இதனை அறுவடை செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

இந்த இஞ்சி உற்பத்திச் செய்கையை காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எம்.அலிசப்ரி மற்றும் அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) சென்று பார்வையிட்டனர்.

இந்த இஞ்சிச் செய்கை முயற்சி பாராட்டுக்கு உரியது எனவும் இதை ஊக்குவிப்பதற்கு எதிர்காலத்தில் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எம்.அலிசப்ரி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X