2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு உள ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உள ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறி திங்கட்கிழமை (25) செவ்வாய்க்கிழமை (26) ஆகிய தினங்களில் மட்டக்களப்பு மன்றேசா தியான இல்லத்தில் இடம்பெற்றது.

ஹென்டிகப் இன்டநெஷனல் நிறுவனத்தின் கமிட் (ஊயஅனை) எனப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி நெறி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை செயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் சுமார் 25 பேர் இந்தப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளை உள ரீதியில் பலப்படுத்துவதன் மூலம் அவர்கள் தாங்களாகவே வாழ்வாதாரத் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பதால் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்படுவதாக கமிட் செயல்திட்ட இணைப்பாளர் எம். ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொழில் வழிகாட்டல் உளவளத்துணை ஆலோசகர்களான ஏ. ஜெயநாதன் மற்றும்  எஸ். விஸ்வஜிந்தன் ஆகியோரால் இவ்விரு நாள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X