2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாவியில் பெரிய மீன்கள் பிடிபடுகின்றன

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு – ஏறாவூர் வாவியில் சமீப சில நாட்களாக பெரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

சட்டவிரோத வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்துவருவதால் தற்போது பெரிய மீன்கள் பிடிபடுவது சாத்தியமாகியுள்ளதாக  மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட் தெரிவித்தார்.

சிலவேளைகளில் மீனவர்களின் வருமானம் நாளொன்றுக்கு 10,000 ரூபாய் வரை கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு வாவி சூழ்ந்துள்ள ஏறாவூர், பன்குடாவெளி, நரிப்புல்தோட்டம், விளாவெட்டுவான் வலையிறவு போன்ற பகுதிகளிலுள்ள  மீனவர்கள் தற்போது வாவியில் பெரிய மீன்பிடியில் ஈடுபடுவதாக ஏறாவூர் 3ஆம் குறிச்சி மீனவர் சங்கத் தலைவர் தாவூத் றம்ழான் தெரிவித்தார்.

தற்போது வாவியில்   3 கிலோகிராம் நிறையுடைய திலாப்பியா மீன்கள்  7 - 10 கிலோகிராம் நிறையுடைய கூரல் மீன்கள்  6 - 7 கிலோகிராம் நிறையுடைய களப்பு மணலை இன மீன்கள் பிடிபடுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒரு வருட காலமாக சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் பாவிக்கப்படுவதை தடைசெய்வதில் தாம் மீனவர் சங்கங்களுடன் சேர்ந்து பாடுபட்டதின் பலனாகவே இந்தப் பெரிய மீன்களின் வளர்ச்சி காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இருந்தபோதிலும் இன்னமும் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பாவித்து மீன்பிடிப்பதில் சிலர்; ஆங்காங்கே மறைமுகமாக ஈடுபடுகின்றார்கள் என்றும் அவர்களது தோணிகள் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் தடைசெய்யப்படுகின்றன எனவும்; அவர் தெரிவித்தார்





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X