2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் நழீமி இராஜினாமா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபையின் (நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பிலான) சுயேட்சைக்குழு உறுப்பினர் அஸ்ஸெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தனது நகரசபை உறுப்பினர் பதவியை நேற்று வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துகொண்டார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீள அழைத்தல் திட்டத்தின் கீழ், இவர் தனது நகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
இவரின் நகரசபை உறுப்பினர் வெற்றிடத்துக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகஸ்தருமான எம்.எம்.ஜனூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

9 உறுப்பினர்களைக் கொண்ட காத்தான்குடி நகரசபையில் (நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின்) சுயேட்சைக்குழு சார்பில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X