2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கூட்டமைப்பினால் தான் இளைஞர்கள் பலிக்கடாவானார்கள்: சந்திரகாந்தன்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமிழ் இளைஞர்களை பலிக்கடாவாக்கினர் என்று தெரிவித்துள்ள  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்றிருக்கின்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரின் ஒரு பிள்ளையாவது போராட்டத்தில் இறந்திருக்கின்றதா? எனக் கேள்வியெழுப்பினார்.

கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தை திமிலைதீவு கிராமத்தில், புதன்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் இளைஞர்களுக்கு உணர்ச்சிகளையூட்டி களத்திற்கு அனுப்பினார்கள். அப்பாவி தமிழ் இளைஞர்கள் செத்துமடிந்தபோது தமது பிள்ளைகளை மாத்திரம் வெளிநாடுகளில் தங்கவைத்தார்கள். இன்று உங்கள் முன்வந்து மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்தும் நச்சுக்கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள்.

இன்றிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரது பிள்ளையாவது போராட்ட களத்தில் இறந்திருக்குமா என கேட்க விரும்புகிறேன்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி ஒழிக்கப்பட்டால் தமிழ் ஈழம் மலரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இன்று, நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிவந்திருக்கிறது. என்ன நடக்கிறது. இலங்;கை அரசுடன் புதிய இந்திய அரசு ஒன்றுபட்டு செயற்படுகின்றது.

இப்படித்தான் காலத்திற்கு காலம் பொய்களை கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது என்றார்.

இந்த வைபவத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் உட்பட அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X