2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி பணிகளுக்கான நிதி விழங்கிவைப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாண்டிற்கான அரசின் பன்முகப்படுத்தப்பட்ட 30 மில்லியன் ரூபாய் நிதி  52 பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

இதில் 20 ஆலயங்கள், 16 விழையாட்டுக் கழகங்கள், 14 பாடசாலைகள், 2 பிரதேச சபைகளும் அடங்குகின்றன.

மேலும் விசேட திட்டங்களுக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் இருந்து பெற்ற 3.2 மில்லியன் ரூபாய் மேலும் 11 அமைப்புக்களுக்கு வினாயகமூர்த்தி முரளிதரன் வழங்கி வைத்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராஜா, கல்குடா வலையக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ கிருஷ்ணராஜா, கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசிங்கம், பிரதிமைச்சரின் இணைப்பு செயலாளர் பொன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X