2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின்; செங்கலடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு வரட்சி நிவாரணமாக உலர் உணவுகளை மாவட்ட லயன்ஸ் கழகம் நேற்று சனிக்கிழமை (30) வழங்கிவைத்தது. 

கொடுவாமடு, பங்குடாவெளி, தளவாய், இலுப்படிச்சேனை, கரடியனாறு, வேப்பவெட்டுவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தலா குடும்பத்துக்கு 2,500 ரூபாய் பெறுமதியில் அரிசி உள்ளிட்ட உலர் உணவுகள் வழங்கப்பட்டன. 

செங்கலடி அருவி மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் செங்கலடி ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் எம்.மகேந்திரராஜா, மாவட்ட லயன்ஸ் கழக ஆளுநர் லயன்; ஈ.டபிள்யூ.ஏ.ஹரிச்சந்திரா, லயன்ஸ் மாவட்ட முன்னாள் தலைவி லேடி லால் மனுவலே, அருவி மொழிக் கழக செயலாளர் விஜயகுமார் பிறேமகுமார், உறுப்பினர் வி.சுரேஷ்குமார் உட்பட  பலர்  கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X