2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆங்கில ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


பிரிட்டிஷ் கவுன்ஸில் மூலம் ஆங்கிலப் பயிற்சியை முடித்த  மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலய ஆங்கில ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (30) மட்டக்களப்பு சர்வோதய மாவட்ட பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 28 ஆங்கில ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்ஸில் மூலம் ஆங்கில பயிற்சி நெறி வழங்கப்பட்டது.

சிறார்களிடையே ஆங்கில அறிவை மேம்படுத்தல், உரையாடுதல், (Speaking Promoting and Involving Children in English) போன்றவற்றுக்காக ஆங்கிலத்தைப் போதிக்கும் மாற்று தாய்மொழியைக் கொண்ட ஆசிரியர்களுக்காக இந்த பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் பயிற்சி நெறியை பிரிட்டிஷ் கவுன்ஸில் போதனாசிரியர்களான டேனியல் கிராவ்ஸ் மற்றும் விக்டோரியா கொட்சால் ஆகியோர் வழஙகியிருந்தனர்.

இந்நிகழ்வில், தருணய ஹெடக் (நாளைய இளைஞர்) அமைப்பின் கல்விப் பிரிவு இணைப்பாளரும் ஏறாவூர் நகர சபைத் தலைவருமான அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், ஸ்பைஸ் (Speaking Promoting and Involving Children in English)  சிறுவர் ஆங்கிலக் கல்வி இணைப்பாளர் மொஹான் சமரசிங்ஹ ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X