2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் நிவாரண கடன் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெறும் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் 'சஹன அருண' 'நிவாரண உதயம்' எனும் திவிநெகும திணைக்களத்தின் நிவாரணக் கடன் திட்டம், அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தால் ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏறாவூர் கிழக்கு சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

முதற் கட்டமாக சிறு உற்பத்தி திறன் முயற்சிகளில் ஈடுபடுகின்ற 20 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் சஹன அருண கடனாக வழங்கப்பட்டது.

சஹன அருண கடன் திட்டத்தில் நன்மை பெற பிணைதாரர் தேவையில்லை, வயதெல்லை இல்லை, ஈடுகள் இல்லை, மேலதிக ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை, ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை கடன் பெறலாம்.

4 சதவீத வருடாந்த வட்டி அத்துடன் ஒரு வருடத்துக்கு பின்னர் 24 தவணைகளில் மீளச் செலுத்தும் வசதி உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வாழ்வின் எழுச்சித் திட்ட மாவட்ட முகாமையாளர் ஏ.எம். அலிஅக்பர், ஏறாவூர் கிழக்கு சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் எஸ்.எச். முஸம்மில், ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். சயீட் உட்பட இன்னும் சமுர்த்திப் பயனாளிகள் அநேகர் கலந்து கொண்டனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X