2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகரையில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 16 கிராமங்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்  'ஒரு கிராமத்துக்கு  ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு கோடியே  60 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வேலைத்திட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு வீதி புனரமைப்பு, வீதிக்கு கொங்கிறீட் இடல், கல்வெட்டு அமைத்தல், பொதுக்கட்டடம், குழாய்க்கிணறு அமைத்தல் போன்றவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இன்று திங்கட்கிழமை (08) அவர் கூறினார்.

வாகரை பிரதேச செயலகப் பிரிவினுள் அடங்கும்  அம்மந்தனாவெளி, பால்ச்சேனை, வட்டவன், மதுரங்கேணிக்குளம் ஆகிய கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட 'ஒரு கிராமத்துக்கு  ஒரு வேலைத்திட்டம்' ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில்,  2014ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் ஒதுக்கீடு செய்த நிதியின் மூலம் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 16 வேலைத்திட்டங்களும் கூடவே சமயம் மற்றும் சமூக நலப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X