2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விழிப்புலனற்றோர் பாடசாலையின் கொடிவாரத்துக்கு கொடி விற்பனை

Gavitha   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் கொடிவாரத்தையொட்டி கொடிகள் விற்பனை செய்து நிதி சேகரிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (15) ஆரம்பமானது.

முதல் கொடிகள் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் தேவுதாவுத்துக்கு தரிசனதத்தின் தலைவர் எம். தேவானந்தாவினாலும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி. எஸ். எம்.  சாள்ஸிசிக்கு தரிசனத்தின் சிரேஷ்ட ஆசிரியை பி. பாஸ்கரனாலும் வழங்கி வைக்கப்பட்டன.

1992இல் ஆரம்பிக்கப்பட்டு 22 வருடங்கள் கடந்த நிலையில் இப்பாடசாலையில் 12 பேர் பட்டம் பெற்று அதில் 10 பேர் ஆசிரியர்களாகவும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாகவும் வேலை செய்கின்றனர்.

கொடிவாரம் இன்று (15) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X