2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தை ஊக்குவிக்கும் பயிற்சி நெறி

Thipaan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மத்திய சுற்றாடல் அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படும், பாடசாலை மட்ட சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தை ஊக்குவிக்கும் முகமான திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி, மட்டக்களப்பில் நேற்று (14) நிறைவு பெற்றது.

சுற்றாடல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மாணவர்களின் திறன் அபிவிருத்தியை மேம்படுத்துவது பற்றியதாக பயிற்சி நெறி அமைந்திருந்தது.

கடந்த 13ம், 14ம் திகதிகளில் மட்டக்களப்பு  சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கிழக்கு மாகாணப்; பணிப்பாளர் எம். சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை சிரேஷ்;ட சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். கோகுலன் உட்பட முகாமைத்துவப் பயிற்சித் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் நிதி அனுசரணையுடன் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களத்தின் ஊடாக சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டப் பயிற்சி நெறி நடத்தப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X