2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Thipaan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கோட்டைக் கல்லாற்றை சேர்ந்த நல்லையா நவரெட்ணம் (65 வயது) எனும் மரம் அரியும் ஆலை ஒன்றில் கணக்காளராக தொழில் புரிபவரே இவ் விபத்தில் உயிர் இழந்துள்ளார்.

இவர் துவிச்சக்கர வண்டியில் வீதியைக் கடந்து மர ஆலைக்கு செல்ல முற்பட்ட வேளை, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற தனியார் பஸ்வண்டி மோதியதனாலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையை அடுத்து உறவினரிடம் பிரேதம் ஒப்படைக்கப்படும் என வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் சாரதியை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X