2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டிவைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல்- அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை அலுவலக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) காலை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ். கமர்தீன் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப்பின் 14ஆவது ஆண்டு ஞாபகார்த்தத்தை முன்னிட்டு இந் நிகழ்வு இடம்பெற்றது.

சுமார் 20 இலட்ச ரூபாய் செலவில் இந்த அலுவலகக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இன்றைய நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்  பெற்றோர் கல்வித் திணைக்கள அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X