2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைது

Gavitha   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்ட நாட்களாக கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் செவ்வாய்கிழமை (16) தெரிவித்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீராவோடை பகுதியில் மோட்டார் சைக்கிளைத் திருடியதாக, பொதுமக்கள் ஒரு சந்தேக நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று பல பாகங்களாக பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையிலும் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் முழுமையாகவும் பிறைந்துரைச்சேனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறான மோட்டார் சைக்கிள்களைத் திருடி பாகங்களாகப் பிரித்து மீண்டும் ஒருங்கிணைத்து விற்கும் திருட்டுக்களோடு சம்பந்தப்பட்ட மேலும் சிலர் சிக்கலாம் என்றும்  வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X