2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாதணிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

போரதீவு கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பாதணிகள்  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் நலன் கருதி கல்விச்சேவைகள் அமைச்சால் பாதணிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட போரதீவுப்பற்று கோட்டத்திலுள்ள 32 பாடசாலைகளில் பாதணிகள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் பட்டிருப்பு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.விமலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போரதீவுப்பற்று கோட்டத்திலுள்ள 32 பாடசாலைகளில் கற்கும்   சுமார் 9,000 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்படவுள்ளதாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி கே.பாலச்சந்திரன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X