2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார நிதி உதவிகள் வழங்கி வைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


யுத்தத்தினால் நலிவடைந்த பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால், விசேட நிதி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வறிய நிலையில் உள்ள பெண்களுக்கு வாழ்வாதாரத்துக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 14 மாதர் அபிவிருத்திச் சங்கம், மகளிர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட 72 பயனாளிகளுக்கு 14 இலட்ச ரூபாய் வாழ்வாதார நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதற்காக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் தனது விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ராசமணி லதாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. நவநாயகம், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி. ரவீந்திரன், உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X