2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆத்துவாழையால் மீனவர்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை உட்பட சில வாவிகளில் 'ஆத்துவாழை' எனப்படும் ஒருவகையான தாவரம் படருவதால் மீன்பிடிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாவரம் வாவிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக படர்ந்து காணப்படுகின்றது. இதனால்,  தோணிகளில் சென்று மீன்பிடிக்கும்போதும் வலைகளை  வீசி மீன்பிடிக்கும்போதும் தாம் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்;ஜ்ஜிடம் கேட்டபோது, இக்காலப் பகுதியில் 'ஆத்துவாழை' தாவரம்; படருவதாகவும் இதை அப்புறப்படுத்த வேண்டியுள்ளதெனவும் தெரிவித்தார்;.

மீனவர் சங்கங்கள், சமூக நிறுவனங்கள், தொண்டர் சேவையின் மூலம் இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X