2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜப்பானிய பெண்கள் பல்கலைக்கழக குழுவினர் ஏறாவூருக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக்கழகத்தின்   பேராசிரியையும் மாணவிகளும்  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு நேற்று புதன்கிழமை (17) வருகைதந்தனர்.

இதன்போது, ஜப்பான் முறையில்  சமையல் செய்து இங்குள்ளவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர்.

மேலும், ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் தங்கி அவர்களின் நிகழ்வுகளிலும் மேற்படி பல்கலைக்கழகத்தின்  பேராசிரியை மோமோ வகூரியும்
9 மாணவிகளும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் மேற்படி பல்கலைக்கழகத்தின்  பேராசிரியை மோமோ வகூரி, நிர்வாக அதிகாரி நிச்சிக்கோ டொகுமாரு,  ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம், சர்வோதய சர்வதேச பிரிவின் இணைப்பாளர் பந்துல செனவிரெட்ன, பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சர்வோதய இயக்கத்தின் சர்வதேச கற்கைகளுக்கான பிரிவு இந்த பரஸ்பர நட்புறவுடனான வெளிக்கள கற்றல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு உட்பட வேறு சில மாவட்டங்களிலும் 3 வாரங்கள் மூவின மக்களோடு மக்களாக தங்கியிருந்து தமது நட்புறவு கற்றலை மேற்கொள்வர் என்று  பேராசிரியை மோமோ வகூரி தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X