2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணிகளில் கைதிகள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


நீதிமன்றத் தீர்ப்பளிக்கப்பட்ட சிறு குற்றவாளிகளைக் கொண்டு நிறைவேற்றப்படும் சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணிகள் ஏறாவூரில் நேற்று புதன்கிழமை (17)  ஆரம்பிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சமுதாயச் சீர்திருத்த உத்தியோகஸ்தர் சுப்பிரமணியம் தயானந்தன் தெரிவித்தார்.

இந்தப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும்  அவர் கூறினார்.

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களமானது சிறைக்கைதிகளின் நன்னடத்தையை விருத்தி செய்து அவர்களை சமூக வாழ்வில் மீண்டும் இணைப்பதற்காக இத்தகைய வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதாகவும் அவர் கூறினார்;.

ஏறாவூர் வாவிக்கரையோரமாக ஏறாவூர் பிரதேச செயலகத்தை அண்டியுள்ள வடிகான்களில் நிரம்பியிருந்த சாக்கடைகளை துப்புரவாக்கும் பணி நேற்றையதினம்  இடம்பெற்றது.

ஏறாவூர் நகரசபைப் பிரிவில் டெங்கு நோயை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த சிரமதானப்பணி மேற்கொள்ளப்படுவதாக ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழின் வழிகாட்டுதலின் பேரில் சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 11 ஆண் சிறைக்கைதிகள் முதற்கட்டமாக இந்த சமுதாயஞ்சார் சீர்திருத்த சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சமுதாய சீர்திருத்த உத்தியோகஸ்தர் எஸ்.தயானந்தன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பி.கலைவாணன், கிராம சேவகர்கள் ஏ.எல்.ஏ.சித்தீக், எம்.ஐ.கபீர் முஹம்மத் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X