2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சர்வதேச அமைதி தினத்தையொட்டி நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஜீவசக்தி அமைப்பால் பல்வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில் மாவட்டம் தழுவியதாக இந்த நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக ஜீவசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

வாகனப் பேரணிகள், திறந்த வீடியோ நிகழ்வுகள், பலூன் பறக்கவிடும் நிகழ்வுகள், திரையரங்குக் காட்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

20ஆம் திகதி வாகரை, கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்திலிருந்து பனிச்சங்கேணி, வாழைச்சேனை சந்தை, கிரான் சந்தி, செங்கலடி சந்தி ஆகியவை ஊடாக வரும் பேரணி அப்பகுதிகளில் 10 நிமிடங்கள் தரித்துநிற்கும்.

இந்த வாகன பேரணியானது மட்டக்களப்பு பஸ் நிலையத்தை  வந்தடையவுள்ளது.

இதேபோன்று 21ஆம் திகதி காலை முதலைக்குடா மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணியானது அம்பிளாந்துறை, பழுகாமம், போரதீவு, பட்டிருப்பு, தாழங்குடா, ஆரையம்பதி ஊடாக கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்துக்கு வரவுள்ளது.

இந்த பவனியின்போது மேற்குறிப்பிட்ட இடங்களில் வாகன பேரணி தரிக்கப்பட்டு சர்வதேச ரீதியில் அறியப்பட்ட அமைதி பற்றிய சொற்பொழிவாளர் பிரேம் ராபட்டின் சொற்பொழிவு காணொளி பத்து நிமிடங்கள் ஒளிபரப்பப்படும்.

இதனைத் தொடர்ந்து அன்று மாலை 4.30 மணியளவில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வீடியோ கண்காட்சி இடம்பெறவுள்ளதுடன், அமைதிக்கான நூறு பலூன்களும் பறக்கவிடப்படவுள்ளன.

சர்வதேச ரீதியில் அறியப்பட்ட அமைதி பற்றிய சொற்பொழிவாளர் பிரேம் ராபட்டின் அமைதி பற்றிய செயற்றிட்டத்தின் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை நோக்காகக்கொண்டு இந்த நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் வீடியோ கண்காட்சி நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச, சமய, சமூக பெரியார்களும் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X