2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அல்குர்-ஆன் மனன போட்டி

Gavitha   / 2014 செப்டெம்பர் 18 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


முதல் தடவையாக காத்தான்குடியில் அல்குர்-ஆன் மனன போட்டி புதன்கிழமை (17) காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரியிலுள்ள அல் றாசித் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 88 மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பற்றியுள்ளனர். இப்போட்டி ஆண்களுக்கு மூன்று பிரிவுகளாகவும் பெண்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெறுகின்றது.

ஆரம்ப தின போட்டிகள் ஆண்களுக்கு நடைபெற்றதுடன் பெண்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை (20) நடைபெறவுள்ளது.

அல்மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் செயலாளர் அஸ்ஸெய்ஹ் ஏ.எல்.மும்தாஸ் மதனீ இந்த போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
இதன் ஆரம்ப வைபவத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகள், உலமாக்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X