2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார அபிவிருத்திக்கான வாய்ப்புகளுக்கு உதவுதல் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வாழ்வாதார அபிவிருத்திக்கான வாய்ப்புகளுக்கு உதவுதல் மற்றும் அனுசரணை அளித்தல் தொடர்பான ஆராய்வுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய திவிநெகும திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தத்திட்டம் வடக்கு, கிழக்கு, வட மத்தி, ஊவா மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த வாய்ப்புகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் எம்.குமாரசிறி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், நீர்ப்பாசன, கடற்றொழில் அபிவிருத்தி, கமநல, விவசாயத் திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யூ.எஸ்.எய்ட்டின் செயற்பாட்டுக்குழு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச்செயற்றிட்டம் செயற்படுவதற்கு உதவும் வகையில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் திணைக்களத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், இக்கூட்டத்தில் யூ.எஸ்.எய்ட்டின் செயற்பாட்டுக்குழுத் தலைவரினால் வாழ்வாதார அபிவிருத்திக்கான வாய்ப்புக்களுக்கு உதவுதல் மற்றும் அனுசரணையளித்தல் திட்டம் தொடர்பான பல்வேறு விளக்கங்களும் முன்வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X