2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனையும் சுகாதார விழிப்புணர்வு அறிவூட்டல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி குமாரவேலியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனையும் சுகாதார விழிப்புணர்வு அறிவூட்டலும் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.

செங்கலடிப் பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி ஆர். ரவிச்சந்திரன் தலைமையில்  நடாத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முகாமில் 195 மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது என்று செங்கலடி பிரதேச சுகாதாரப் பரிசோதகர் வி. விஜயகுமார் தெரிவித்தார்.
மேலதிக சிகிச்சைக்காக இனம் காணப்பட்ட மாணவர்களுக்கு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்குரிய ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டது என்று விஜயகுமார் மேலும் கூறினார்.

மருத்துவப் பரிசோதனை முகாமில் பாடசாலை ஆசிரியர்களும் பங்கேற்றனர். மாணவர்களுக்கான சுகாதாரக் கல்வி தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

மருத்துவப் பரிசோதனை முகாமில் செங்கலடி பிரதேச சுகாதாரப் பரிசோதகர் வி.விஜயகுமார், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X