2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிரமதானப்பணி

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சனிக்கிழமை (20) சிரமதானப் பணி நடைபெற்றது.

வின்சன்ற் டி போல் ஞாபகார்த்தமாக இச்சிரமதானப் பணியை ஏற்பாடு செய்திருந்ததாக வின்சன்ற் டி போல் சபையின் ஆரையம்பதி பிராந்தியத் தலைவர் ரீ. மோகனராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆரையம்பதி பாத்திமாபுர கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் வின்சன்ற் டி போல் சபை ஆகிய அமைப்புக்களின் சுமார் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைச் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வைத்தியசாலை வளாகமும், வைத்தியசாலையின் 4ஆம் விடுதியும் முழுமையாக சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்யப்பட்டதாக பாத்திமாபுர கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

மாவட்ட வைத்திய அதிகாரி மோகனாவதி சுவேந்திரன், வைத்தியர்களான ரி. திவாகரன், எஸ். ஸ்ரீபரதன், வின்சன்ற் டி போல் சபையின் பிராந்தியத் தலைவர் ரீ. மோகனராஜா, பாத்திமாபுர கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் அனுலா அன்ரன், தலைவர் எஸ். சுரங்கா உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு சிரமதான நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X