2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திய நோக்கிய பயணத்தை அடைதல் பயிற்சி நிறைவு

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


அபிவிருத்திய நோக்கிய பயணத்தை அடைதல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு பட்டிப்பளை பிராந்திய வேள்ட் விசன் அமைப்பின் திட்ட முகாமையாளர் ஜீ.ஜே.அனுராஜ் தலைமையில் மட்டக்களப்பு மன்ரேசா பயிற்சி நிலையத்தில் கடந்த புதன்கிழமை (17) ஆரம்பமாகி மூன்றுநாள் வதிவிடப் பயிற்சியாக நடைபெற்று வெள்ளிக்கிழமை (19) மாலையுடன் முடிவடைந்தது.

பட்டிப்பளை வேல்ட் விசன் பிராந்திய அபிவிருத்தி திட்ட பிரிவு நடைமுறைப்படுத்தும் அபிவிருத்தி தொடர்பான செயற்திட்டத்தின் பிரகாரம், பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அம்பலாந்துறை, மாவடிமுன்மாரி, பனிச்சையடிமுன்மாரி போன்ற கிராமங்களின் உள்ள இளைஞர் யுவதிகள்;  இதில் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சிக் கருத்தரங்கின் போது பயிற்றுவிப்பாளர்களாக வேள்ட் விசன் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தித்திட்ட பிரிவின் திட்ட இணைப்பாளர்களான என். அமுதன், வீ.சிறிராஜ் மற்றும் என்.சபேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபிவிருத்திக்கான இலக்கு, மாற்றத்துக்கான தனிமனித அபிவிருத்தி மற்றும் குடும்பத்தில் ஏற்படும் தாக்கங்கள், இளைஞர் யுவதிகளுக்கான பொறுப்புக்கள், மாற்றத்தினால் எவ்வாறான அபிவிருத்தியை பெற்றுக் கொள்ளலாம் போன்ற விடயங்கள் தொடர்பாக பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X