2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு வாகனப் பேரணி

Thipaan   / 2014 செப்டெம்பர் 20 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சர்வதேச சமாதான தினத்தையொட்டிய விழிப்புணர்வு வாகனப் பேரணி இன்று சனிக்கிழமை (20) மாலை மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது.

மட்டக்களப்பு ஜீவ சக்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி, இன்று அதிகாலை வாகரையில் ஆரம்பமாகி திருமலை மட்டக்களப்பு வீதி வழியாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்ததுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமைதி சாத்தியம் எனும் தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வீதியில் பயணித்தோருக்கு வழங்கினர்.

நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் அமைதி உங்கள் உள்ளேயே உள்ளது எனும் பிரேம் ராவட்டின் செய்தி  தொலைக்காட்சியில்; கல்லடிப் பாலத்தருகில் ஒலி மற்றும் ஒளி பரப்புச் செய்தனர்.

கல்லடி சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நாளை ஞாயிறு பி.ப. 4.00 மணிக்கு பிரேம் ராவட்டின் செய்தியுடன் பலூன்கள் பறக்கவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X