2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையில் தன்னாமுனை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ், அதே பாதையில் மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹெல்ப் ரக வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹெல்ப் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பழுகாமம் மற்றும் அம்பிளாந்துறையைச் சேர்ந்த 4 தச்சுவேலைத் தொழிரலாளர்கள் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X