2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சமாதான செய்தி தாங்கிய பலூன்கள் விடும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சர்வதேச அமைதி தினத்தையொட்டிய சமாதான செய்தியை தாங்கிய பலூன்கள் விடும் நிகழ்வு, கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (21) இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஜீவ சக்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி. எஸ். ஏம். சாள்ஸ் மற்றும் கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாஜீ ஆகியோர் பலூன்களைப் பறக்கவிட்டனர்.

நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் அமைதி உங்கள் உள்ளேயே உள்ளது எனும் பிரேம் ராவட்டின் செய்தியை  தொலைக்காட்சியில் ஒலி மற்றும் ஒளி பரப்புச் செய்தனர்.

தகவல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியால் இச்சமாதானச் செய்தி உலக வாழ் மக்கள் எல்லோருக்கும் சென்றடையும் என்பதில் எதுவித ஐயமில்லை என அவர் வழங்கிய செய்தியில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X