2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி மூன்றாம் குறிச்சி 165 ஏ கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சமூகச் சீர்கேடுகளை கட்டுப்படுத்துவது  தொடர்பான விழிப்புணர்வூட்டும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்டது.

இதன்போது, சிறுவர் துஷ்;பிரயோகம் மற்றும் சமூகச் சீர்கேடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சிறுவர்களின் பாதுகாப்பு, சிறுவர்களின் நடவடிக்கையில் பெற்றோர் விழிப்பாக இருக்கவேண்டும் ஆகியன தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

பஞ்சகர்ம வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரி ஏ.விமலேஸ்வரி, அஸ்ஸெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, மனித உரிமைகள் புலனாய்வு அதிகரி ஏ.சி.ஏ.அஸீஸ், கிராம உத்தியோகஸ்தர் எம்.அஸ்ஹர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X