2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

'பெண்கள் மற்றும்  சிறுவர்கள் மீதான வன்முறையை ஒழிப்போம்', 'காத்தான்குடி சிறுமியொருவர்  துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிப்போம்', 'படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்' ஆகியன ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்களினால் முன்வைக்கப்பட்டன.

சூரியா பெண்கள் அமைப்பு, காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான மகளிர் ஒன்றியம், காத்தான்குடி ஸியாட் பவுண்டேசன், மாவட்ட மகளிர் சம்மேளனம், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்துக்கான மக்கள் கூட்டமைப்பு, காத்தான்குடி 5ஆம் குறிச்சி மகளிர் சங்கம், புதிய காத்தான்குடி மகளிர் சங்கம் ஆகியனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டன.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சதுக்கத்திலிருந்து பேரணியாகச் சென்று, மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக சுலோகங்களை தாங்கியாவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக அணிதிரள்வோம்', 'சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு உச்ச தண்டனையை வழங்குங்கள்', 'படுகொலை செய்யப்பட்ட சீமாவுக்கு நியாயம் எங்கே?' உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை பேரணியில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X