2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரச உத்தியோகஸ்தர்களின் இடமாற்றப்பட்டியல் வெளியீடு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர்களின் 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றப்பட்டியல் கிழக்கு மாகாண நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மராஜாவால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த இடமாற்றமானது 01.01.2015 முதல் நடைமுறைக்கு வரும் எனவும்  இடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளை பெற்றுக்கொள்ளும் கடைசித் திகதி 10.10.2014 எனவும் மேன்முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அனைத்தும் 01.11.2014 முன்னர் அறியத்தரப்படும் எனவும்  கிழக்கு மாகாண நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

மேற்படி 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றப்பட்டியலை www.ep.gov.lk  என்ற இணையத்தளத்தில் பார்வையிடமுடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X