2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண்களின் உரிமை, பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 24 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல் 
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமை, பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவினால் ஏறடபாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் மு.தனபாலசுந்தரத்தின் வழிகாட்டலின்  இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை இடைவிலகிய 10 மாணவர்கள் இனங்காணப்பட்டு 4 மாணவர்கள் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கும் 3 மாணவர்கள் தொழிற் பயிற்சி நிலையத்துக்;கும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது குடும்பிமலை கிராமத்தில் கிராம மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்பு குழுக் கூட்டம் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை கொண்ட குடும்பங்களை பதிவு செய்தல், இல்லதரிசிப்பு போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற செயற்பாடுகள் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டு, அடுத்த வருடத்துக்குள் இப்பகுதியிலுள்ள பாடசாலை இடைவிலகல்களை பாரிய அளவில் குறைக்கலாம் எனவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X