2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 24 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதான வீதியில்  இன்று (24) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், கும்புறுமூலையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கு.இராசதுரை (வயது 60)  என்பவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த இவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமொன்று துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வயோதிபரை மோதியதினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X