2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

டெங்கு நுளம்புகள் தொடர்பில் விழிப்பூட்டும் நிகழ்வு

George   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்  
 
டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கைகளின் ஒருகட்டமாக மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸாரினால், மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு புதன்கிழமை(22), வெல்லாவெளி மண்டூர் கிராமத்தில் நடைபெற்றது.
 
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பெறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில்  இராணுவத்தினர், பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
இதன்போது மண்டூர் பிரதேசத்திலுள்ள வீடுகளுக்கு விஜயம் செய்து, நுளம்புகள் பரவுவதை தடுப்பதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. 



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X