2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொஸ்லாந்த மக்களுக்கு நிவாரணம் கையளிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனத்;தினால், பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வெள்ளிக்கிழமை (31) வழங்கப்பட்டன.

நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் மௌலவி ஹாறூன் (ஸஹ்வி) தலைமையின்; கீழ், பதுளை பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த மக்களுக்கே நிவாரணப்பணிகள் வழங்கப்பட்டன.

இதன்போது, நிறுவனத்தின்  பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர், நிறுவனத்தின் செயலாளர் றிஸ்வின், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ், மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் வீ.கமலதாஸ், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ், நிறுவனத்தின்;; தொண்டர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X