2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

போதிய நிவாரணம் உண்டு; இடைநிறுத்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 06 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

கொஸ்லாந்தை, மீரியாபெத்த  மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை சேகரிப்பதில் இதன் பின்னர் யாரும் ஈடுபடவேண்டாம் என்று பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  பி.;எஸ்.எம்.சாள்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசாரப் பிரிவினால் பாரம்பரிய பொருட்கள் ஆவணப்படுத்தப்பட்ட  பெட்டகம் நூல் வெளியீடு செவ்வாய்க்கிழமை (04)  மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

பிரதேச செயலாளர்கள், வர்த்தக சங்கத்தினர், நலன்விரும்பிகளால் சேகரிக்கப்பட்டு எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாய்  பெறுமதியான பொருட்கள் 5 லொறிகளில் அனுப்பப்பட்டுள்ளன.  போதியளவு நிவாரணப்பொருட்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டமைக்கு அமையவும் சேகரிப்பினால் பலகுழறுபடிகள் ஏற்படும் என்பதால் சேகரிப்புப் பணியை இத்தோடு நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சேகரிக்கப்பட்ட பணம் எம்மிடம் உள்ளது.  இப்பணத்தைக் கொண்டு அனர்த்தத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களின் பெயரில் வங்கிக்கணக்குகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அவர் கூறினார்;. இப்பணிக்கு உதவியளித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நூல் பற்றி அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பாரம்பரிய தொழில் மற்றும் பாவனைப் பொருட்கள் பற்றி இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களை புதிய தலைமுறையினர் மறந்துவிட்டு, வெளிநாடுகளிலிருந்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்  முதலிய செயற்கைப் பொருட்களினால் உருவாக்கப்பட்ட பொருட்களை பாவிக்கும் சமூகமாக மாறி வருகின்றனர்.

இயற்கையையும் சூழலையும் மாசுபடுத்தாமல் மண்வளத்துக்கு வலிமை சேர்க்கும் பாரம்பரிய பாவனைப் பொருட்களை மறந்து, அதற்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்களில் உணவு தயாரித்தல் மற்றும் இப்பொருட்களினால் சுற்றாடல் மாசடைதல் போன்ற உடலுக்கு தீமை விளைவிப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.

அண்டை நாடான இந்தியாவில் வெண்கலம், வெள்ளி, செம்பினாலான உலோகப் பாத்திரங்களும் உணவகங்களில் இயற்கையாக கிடைக்கக்கூடிய வாழை மற்றும் தாமரை இலைகைளைப்; பாவிக்கின்றார்கள். பதிலாக நாம் பிளாஸ்டிக்கினாலான உணவு சுற்றும் டிசுப்பேப்பர்களையும்   பிளாஸ்டிக் பாத்திரங்களையும் பாவிக்கின்றோம்.

பெட்டகம் நூல் விற்பனை மூலம் பெறப்படும் நிதியைக் கொண்டு நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதால், இதற்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லோரும் உதவ வேண்டும'; எனவும் தெரிவித்தார்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X