2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மண்முனையில் மோட்டார் குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 07 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்முனையில் நேற்று வியாழக்கிழமை 81 ரக மோட்டார் குண்டு ஒன்றை  மீட்டதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோவில் ஒன்றுக்கு அருகிலுள்ள வயலிலிருந்து இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டது.

இந்த வயலின் உரிமையாளர், விதைப்பு வேலைக்காக வயலை உழுதுகொண்டிருந்தபோது, இந்த மோட்டார் குண்டு தென்பட்டதாகவும் இது தொடர்பில் அவர் காத்தான்குடிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதைத் தொடர்ந்து, குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X